Sirumugai

Tamilarasan

இணையதளத்தில் இணைந்திடுவோம்

எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்!
பாடுகின்ற சங்கீதப்பறவைகளாய்,
பாடித் திரிந்தோம்!
இன்று நானும் ஒரு ஊரில், நீயும் ஒரு ஊரில்,
ஆம்! நம்முள் இருந்த நட்புத்தாமரைகள்,
இன்று அடையாளம் காணமுடியா தூரத்தில்,
அரும்பி அரும்பி தேய்கின்றன!
எங்கிருக்கிறாய் அன்பு நண்பனே!
நமது கால் சட்டை காலத்தின் நாட்கள்
இன்னமும் என் மனதில் ஈரமாய் இருக்கிறது!
உன்னுடன் சேர்ந்து, மண்தரையில் அமர்ந்து
அழுக்கான முகத்துடன், அழுதபடி எடுத்த
அந்த கால பள்ளிப்புகைப்படம்,
இன்னமும் உன்னிடம் இருபதாய்... ஒரு
புகை படிந்த நியாபகங்கள்!

நீயும் அந்த நியாபகங்களை தூசு தட்டி
எடுத்து அனுப்பு நண்பனே!
நமது ஊரின் கதைகளையும் கருத்துகளையும்
கலந்து கொடு நண்பனே! இனி நாம்
இணையதளத்தில் இணைந்திடுவோம்!
இனிதான நம் நட்பையும்,
இனிதான எங்கள் ஊரையும்,
உலகிற்கு காட்டிடுவோம்.

Comment

You need to be a member of Sirumugai to add comments!

Join Sirumugai

Rajshekar Comment by Rajshekar on August 22, 2009 at 10:23pm
nalla visayam... Thodarga.
Balachandar S Comment by Balachandar S on September 19, 2008 at 5:36pm
Awesome. Let me start. This photo is taken in 1988 during my schooldays in Gandhi Matriculation school sirumugai. Click on the photo to open it in my flickR page, it has name with face image maps.
Reminiscence

Badge

Loading…

© 2010   Created by Balachandar S.   Powered by .

Badges  |  Report an Issue  |  Terms of Service